Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS BAN : ஆஸ்திரேலியாவை பந்தாடிய வங்காளதேசம்…! டி20 தொடரை கைப்பற்றியது ….!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது.

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த  4 போட்டிகளில் வங்காளதேசம் மூன்றிலும் , ஆஸ்திரேலியா ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டி20 நேற்று டாக்காவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக   நயீம் 23 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ், கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் வங்காளதேச அணியின்  பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது. இறுதியாக 13.4 ஓவரிலேயே 62 ரன்களுக்கு  ஆஸ்திரேலிய அணி சுருண்டது. இதன்மூலம் வங்காளதேச அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .  வங்காளதேச அணி  தரப்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளும் ,முகமது சைபுதின் 3 விக்கெட்டுகளும்,நசும் அகமது  2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேச அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Categories

Tech |