மிகவும் பலமாக இருக்கக்கூடிய மனிதர் கூட சந்திராஷ்டமம் என்றால் சற்று பயப்படுவார்கள். சந்திராஷ்டமத்தை பற்றி பலரும் பல கருத்துக்களை கூறுகின்றனர். இந்த காலகட்டத்தில் கூட பலரும் சந்திராஷ்டமம் நம்புகின்றனர். சந்திராஷ்டமம் என்றால் எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு எட்டில் சந்திரன் வருகின்றதோ அப்போது அந்த ராசிக்கு சந்திராஷ்டமம் என்று அர்த்தம். இதன் காலம் இரண்டு நாட்கள் ஆகும். எந்த ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதோ அந்த ராசிக்காரர்கள் அன்று முழுவதும் இறைவனின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
சந்திராஷ்டமம் நாட்களில் நமது அறிவு திறனும், மனோபலமும் குறையும். ஏனென்றால் அன்றைய தினம் நாம் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என்று அனைவரும் நம்புகின்றனர். மேலும் பயணங்களை தள்ளி வைக்கின்றனர். முக்கியமான விவாதங்களை தள்ளி வைக்கின்றன. முக்கியமாக யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறுகின்றனர். சுருக்கமாக சொன்னால் நாம் உஷாராக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
சந்திராஷ்டமம் என்று சொல்லிக் கொண்டே நாம் அன்றாட வேலைகளை செய்யாமல் இருக்கக் கூடாது. சந்திராஷ்டம தினத்தில் நாம் இறைவனை வழிபட்டு நம் கடமைகளை செய்து வந்தால் நம்மை நோக்கி வரும் இன்னல்கள் எல்லாம் ஓடிவிடும். எப்பொழுதும் நாம் செய்ய வேண்டிய அலுவலக வேலைகளை தாராளமாக செய்துகொண்டு இருக்கலாம். இறைவனின் நாமத்தை நாம் சந்திராஷ்டம தினத்தில் சொல்லி கொண்டு இருந்தால் நம்மை நோக்கி வரும் எந்த பிரச்சனைகளையும் நம்மால் ஜெயிக்க முடியும்.