Categories
மாநில செய்திகள்

மேகதாதுவில் அணை : வைகோ , GK.வாசன் கண்டனம் ….!!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை அமைக்க அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் மைசூர் மாகாணத்துக்கும் , சென்னை மாகாணத்திற்கும் போடப்பட்ட ஒப்பந்தம் திட்டமிட்ட விதிகளை வகுத்து உள்ளதாக குறிப்பிட்டார். காவிரியின் குறுக்கே அணை கட்ட விரும்பினால் கர்நாடக அரசும் தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டும்.என 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்ட வைகோ  காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை அமைத்தால் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாதுவில் அணை அமைக்க மத்திய அரசு கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். அதே போல  தமிழக அரசிடம் கருத்து கேட்காமல் காவிரியில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என தமிழ்நாடு மாநில தலைவர் GK. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |