Categories
டெக்னாலஜி பல்சுவை

கார் வாங்கணும் நினைக்கிறீங்களா…? இதுதான் சரியான நேரம்… டாடா மோட்டார்ஸின் அட்டகாசமான சலுகைகள்…!!!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு 100% நிதி உதவி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததை அடுத்து பொது மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சமூக இடைவெளி போன்ற காரணங்களுக்காக பைக், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலேயே பயணிகள் விரும்புகின்றனர். கார் இல்லாதவர்கள் புதிய கார்களை வாங்குவதற்கு திட்டமிடுகின்றனர். ஆனால் இந்த நெருக்கடியான சமயத்தில் பெரிய தொகையை கொடுத்து வாங்குவதற்கு இயலாதவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்துடன் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத நிதியுதவியில் நம்மால் வாங்கிக்கொள்ள முடியும். மேலும் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆறு ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தலாம். இது மட்டுமல்லாமல் விவசாயிகளுக்காக மற்றொரு திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் திருப்பி வழங்குதலில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் மூலம் கடன் வாங்கும் விவசாயிகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கடனை திருப்பி செலுத்தலாம். அறுவடை காலத்தை கருத்தில்கொண்டு விவசாயிகளுக்கு இந்த சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்குப் பின்னர் விவசாயிகள் கையில் இருக்கும் பணத்தை வைத்து 6 மாதங்களுக்கு ஒருமுறை கடனை திருப்பி செலுத்த முடியும்.

Categories

Tech |