Categories
உலக செய்திகள்

பல கட்டுப்பாடுகளை விதித்த தலிபான்கள்…. விதியை மீறிய இளம்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்கள் இறுக்கமான ஆடையை அணிந்து கொண்டு வெளியே வந்த இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதைடுத்து அந்நாட்டிலுள்ள பல இடங்களை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் இவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பெண்களுக்கு மிகவும் கடுமையான விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது தங்களுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டை தலிபான்கள் விதித்துள்ளார்கள். மேலும் பெண்கள் அப்படியே வெளியே வந்தால் அவர்களுடைய கணவருடன் தான் வரவேண்டுமென்ற நிபந்தனைகளும் அங்கு உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலுள்ள பலக் மாவட்டத்தில் 21 வயதுடைய நசானின் என்னும் இளம்பெண் இறுக்கமான ஆடையை அணிந்துகொண்டு வெளியே சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தலிபான்கள் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளார்கள். ஆனால் அந்த இளம்பெண்ணை தாங்கள் கொல்லவில்லை என்று தலிபான்கள் தரப்பு கூறியுள்ளார்கள். மேலும் அந்த இளம்பெண் கொலை வழக்கு தொடர்பான தீவிர விசாரணையில் ஆப்கானிஸ்தான் காவல்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.

Categories

Tech |