காரைக்குடி செட்டிநாடு இட்லிப்பொடி
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து – 1 கப்
கடலைப்பருப்பு – 1/2 கப்
வரமிளகாய் – 20
எள்ளு – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடியளவு
பூண்டு – 10 பற்கள்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஒரு கடாயில் கருப்பு உளுந்து , கடலைப்பருப்பு , வரமிளகாய் , எள்ளு , கறிவேப்பிலை , பூண்டு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனை அரைத்து பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால் கமகமக்கும் காரைக்குடி செட்டிநாடு இட்லிப்பொடி தயார் !!!
குறிப்பு : எள்ளுக்கு பதிலாக கொள்ளு சேர்த்தும் அரைக்கலாம் .