தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் கோவை மாவட்டம் கொரோனா மூன்றாவது அலையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் எம். ஏ.சித்திக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் கொரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கிறது. அடுத்த ஒரு மாதத்திற்குள் மூன்றாவது அலை ஏற்படும்.மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வில்லை என்றால் முழு ஊரடங்கு கூட ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.