ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளியினால் கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் தென்மேற்கு பகுதியில் க்யூஷூ நகரம் அமைந்துள்ளது. இந்த நகரை சூறாவளி தாக்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளிக்கு லுபிட் என்று பெயர் வைத்துள்ளனர். இதனால் அங்கு கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூறாவளி காற்றானது மணிக்கு 125 கிலோ மீட்டரில் வேகத்தில் வீசியுள்ளது. மேலும் மழை பொழிவானது 300 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
இந்த சூறாவளியினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அதிலும் ஜப்பானில் சூறாவளி, வெள்ளம், புயல் போன்ற பேரிடர்கள் அடிக்கடி ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 9 சூறாவளிகள் ஜப்பானை தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.