சீனாவில் Xishuangbanna என்ற வன பகுதியிலிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி 16ஆசிய யானைகள் Pu’er என்ற நகரத்தை நோக்கி தங்களது பயணத்தை துவக்கியது. இதனிடையே Yuxi என்ற நகரத்தை சென்றடைந்த யானைகள் சுமார் ஆறு மணி நேரம் நகரத்தை சேதப்படுத்தி சுமார் 760,000 பவுண்டுகள் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து யானைகளை கட்டுக்குள் கொண்டுவர அவசர சேவை அதிகாரிகள், காவல்துறையினர், 120 வாகனங்கள் ஆகியவை சென்றது. மேலும் ட்ரோன்கள் மூலமும் யானையை கண்டறிந்து கட்டுப்படுத்த முயன்றனர் எனினும் யானைகளை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. இதனிடையே யானைகள் தங்களது இருப்பிடத்தை விட்டு அதிகதூரம் செல்லாது ஆனாலும் ஏன் இந்த யானை கூட்டம் மட்டும் 300 நூல்கள் 300 மைல்கள் பயணித்து என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இப்போது அந்த யானை கூட்டம் மீண்டும் தான் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே யானை கூட்டத்தின் இந்த பயணத்திற்கு பல்வேறு தரப்பினர் தங்களது விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் Chen Mingyong என்னும் பேராசிரியர் கூட்டத்தில் பெண் யானை தலைமை ஏற்று தவறாக வழி நடத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் லண்டன் உயிரியல் பூங்காவின் வனத்துறை நிறுவனர் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டதால் யானைகள் குடியிருப்பு பகுதியை நோக்கி இடம்பெயர்ந்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மற்ற நபர்கள் காடுகளில் புல்லைத் தின்று சலிப்படைந்ததால் யானைகள் மனிதர்கள் சாப்பிடும் உணவுப் பயிர்களை சாப்பிட வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.