அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், வேலுமணி உள்பட 17 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவையில் எஸ் பி வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீஸ் தடுப்புகளை வீசி எறிந்து போலீசாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.