Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போன் தகராறில்… சிறுமி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னபுதூர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனுசியாஸ்ரீ என்ற மகளும், தனுஷ் வர்மா என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் தனுசியாஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய தனுசியாஸ்ரீயின் பெற்றோர் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தனுசியாஸ்ரீயின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் தனுசியாஸ்ரீ தனது பாடங்களை செல்போனில் ஆன்லைன் மூலம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தனுசியாஸ்ரீயின் தம்பியான தனுஷ் வர்மா தனக்கு செல்போன் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு தனுசியாஸ்ரீ தான் பாடங்களை படித்துக் கொண்டிருப்பதால் தரமுடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அக்காளுக்கும், தம்பிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மிகுந்த மனவேதனையுடன் இருந்த தனுசியாஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமி தற்கொலை செய்து கொள்வதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |