ரவா முறுக்கு
தேவையான பொருட்கள் :
ரவா – 1/4 கப்
பச்சை அரிசி மாவு – 1 கப்
எள் [அ ] சீரகம் – 1 ஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தண்ணீர் – 1 கப்
செய்முறை :
கடாயில் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு , எள் , வெண்ணெய் , ரவா சேர்த்து வேகவிட வேண்டும் . வெந்ததும் பச்சை அரிசி மாவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும் . பின் பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு சூடான எண்ணையில் பிழிந்து வேகவைத்து எடுத்தால் சுவையான ரவா முறுக்கு தயார் !!!