தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமை நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று வெள்ளை அறிக்கை வெளியான நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆகஸ்ட்-13 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட்-14 ஆம் தேதி வேளாண்மைத்துறை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆகஸ்ட் 16-19 வரை பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மைத்துறை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவிருக்கிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.