பிரபல விஜய் டிவி சீரியல் கூடிய விரைவில் முடியவிறுப்பதாக அச்சீரியல் நடிகை தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றது.
அதன்படி இந்த சேனலில் சுவாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே எனும் சீரியலுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியல் கூடிய விரைவில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த சீரியலில் அகிலா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரமான ரோஜாவே குழுவினருடன் இணைந்து புகைப்படம் ஒன்றையும், வீடியோ ஒன்றையும் எடுத்து அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இது தங்களது கடைசி ஷூட்டிங் நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரமான ரோஜாவே சீரியல் கூடிய விரைவில் முடிய இருப்பதால் ரசிகர்கள் பலர் கவலையுடன் உள்ளனர்.