தமிழகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கை வரவேற்க தயாராகி வருகிறது.
வருகின்ற 11ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாடு வரும் சீன அதிபர் ஜிங்பிங்_கை வரவேற்பதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வரக்கூடிய சீன அதிபர் 11 , 12, 13 ஆகிய மூன்று நாட்கள் இங்கேயே தங்கி இருக்கிறார். இந்திய சீன நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தையை பிரதமர் மோடியுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்கிறார். 11-ஆம் தேதி சென்னை விமான நிலையம் வரக்கூடிய சீன அதிபரை பாரம்பரிய முறைப்படி வரவேற்பதற்கு தயார் செய்யப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி சீன அதிபரை வரவேற்கிறார்.
சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து கிண்டி சென்று அங்கு இருக்க கூடிய தனியார் விடுதியில் தங்குகின்றார். எனவே இந்த பகுதி சாலைகள் முழுவதும் சீரமைக்கப்பட்டு இந்தப் பகுதி மெட்ரோ வழித்தடங்களில் காலியாக இருக்க கூடிய இடங்களில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. எந்தெந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற வழிகாட்ட புதிதாக பலகைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. சீன அதிபரின் வருகையை முன்னிட்டு அனைத்து துறைகளின் சார்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் துரிதப்படுத்தப்படும் சாலைகள் முழுவதும் சீரமைக்கப்பட்டு வருகின்றது. சீன அதிபர் , பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை விமான நிலையத்தின் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடைகள் விதிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.