Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார் இவருக்கு விக்ரம் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் விக்ரம் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விக்ரமிடம் கூறியுள்ளார்.

அதற்கு விக்ரம் சிறுமியை கோவிலுக்கு வரவழைத்து என்னை திருமணம் செய்ய வற்புறுத்தினால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருமயம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்ரமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |