செவ்வாய் கிரகத்தின் மாதிரி அமைப்பில் பயற்சி பெற ஆட்கள் தேவை என அமெரிக்கா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
நம் பூமியில் மட்டுமே வாழ்வதற்கான உகந்த சூழல் இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்பொழுது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா ஆய்வு நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என்று உறுதியாக தெரிய வருவதை அடுத்து மனிதர்களை அங்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
மேலும் செவ்வாய்கிரகம் போன்ற மாதிரி அமைப்பை ஹூஸ்டன் அருகே உள்ள பாலைவனப் பகுதியில் இருக்கும் மணற்க்குன்றின் மீது உருவாக்கியுள்ளது. இது போன்ற அமைப்பில் அதுவும் மிகக் கடினமான சூழ்நிலையில் ஓராண்டு வசிப்பதற்கு பயிற்சி பெற 4 பேர் தேவைப்படுவதாக நாசா அறிவித்துள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பங்களை கடந்த வெள்ளிக்கிழமை முதல் வழங்க ஆரம்பித்துள்ளது. இருப்பினும் அமெரிக்கா குடிமக்கள் மட்டுமே விண்ணப்பங்கள் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.