Categories
மாநில செய்திகள்

அடடா! “வீட்டுக்குள்ள” விறு விறு ரெய்டு…. “ரோட்டுல” சுட சுட உப்புமா, பொங்கல்….!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுகுணாபுரத்தில் எஸ்.பி வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு கூடிய அதிமுகவினருக்கு மதிய உணவு கட்சி சார்பில் உப்புமா, பொங்கல், ரோஸ்மில்க் தக்காளி சாதம் என வித விதமாக சுடசுட வழங்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |