அதிரசம்
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 1 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
சுக்குத்தூள் – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவிட்டு வடித்து 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். பின் இதனை நைசாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும் . கடாயில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி பின் பாகு காய்த்துக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் சுக்குத்தூள் , ஏலக்காய் தூள் , நெய் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி , அரிசி மாவு சேர்த்து கிளற வேண்டும் . இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம் . இந்த மாவை அதிரசமாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான அதிரசம் தயார் !!!
குறிப்பு : பச்சரிசி கொஞ்சம் குண்டு அரிசியாக பார்த்து வாங்க வேண்டும் . பாகு, கம்பி பதத்திற்கு முந்தைய நிலையில் இருக்க வேண்டும் .