பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் கொரானா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிந்தது. அதேபோல் இந்த வருடமும் கொரானா காரணமாக அக்டோபர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகிறது.
https://www.instagram.com/p/CSVnkDRBwxN/?utm_source=ig_embed&ig_rid=8fecb7ea-2dfe-4ab7-9def-a94ee9bc2ad8
கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.