மிகக் குறைவான வட்டியில் கொரோனா சிகிச்சைக்காக வங்கிகள் கடன் வழங்கி வருகின்றது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நாடுமுழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை இழந்து, கடுமையான நிதி நெருக்கடியில் வாடி வருகின்றனர். சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் இடம் கிடைப்பது என்பது மிகவும் அரிதாக இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் சிகிச்சை செய்ய முடியாமலேயே பலர் இறந்து விடுகின்றனர். இத்தகைய சூழலில் வங்கிகள் சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகின்றது.
சென்ற மே மாதத்தில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் 5 லட்சம் வரையில் தனிநபர் கடன் வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தது. இந்த கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கடனை பெற்று அதை வைத்து சிகிச்சை செலவுகளை பார்த்துக் கொள்ளலாம். கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மத்திய ரிசர்வ் வங்கி இதனை அறிவித்திருந்தது. சம்பளம் பெறும் நபர்களுக்கு 6.8 சதவீதத்தில் தொடங்கி கடன் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது ரூபாய் 25 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.
அதன்படி,
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: ரூபாய் 25 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கடன், 8.5% வட்டி
பஞ்சாப் நேஷனல் வங்கி: அதிகபட்சம் மூன்று லட்சம் வரை கடன், 8.5% வட்டி
பேங்க் ஆப் பரோடா: 5 லட்சம் வரை கடன், 8.5% வட்டி
இந்தியன் வங்கி: 6.85 சதவீத வட்டி
கனரா வங்கி: ரூபாய் 25 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கடன், 8.5% வட்டி