Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களை பிரித்து விடுவார்கள் என்பதால்… காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்… காவல்துறையினரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராதிகா என்ற மகளும், ராஷித் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவின் தோழியான தும்பல் பகுதியில் வசிக்கும் ரூபிகா பானு என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று போது தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது ரூபிகா பானு ராதிகாவின் தம்பியான ராஷித் என்பவருடன் பேசியுள்ளார். அவ்வாறு ரூபிகா பானு மற்றும் ராஷித் பேசி பழகியதால் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை இருவரும் வீட்டில் உள்ள பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு இரு  வீட்டாரின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ராஷித் மற்றும் ரூபிகா பானு ஆகிய இரண்டு பேரும் இணைந்து வீட்டை விட்டு வெளியே சென்று கெங்கவல்லி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து ராஷித் மற்றும் ரூபிகா பானு ஆகிய இரண்டு பேரும் இணைந்து தனது மனைவியின் பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்பதால் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று அப்பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் ராஷித் மற்றும் ரூபிகா பானு ஆகியோரின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து சமாதானம் பேசியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ரூபிகா பானுவை அவரின் கணவரான ராஷித்வுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |