Categories
தேசிய செய்திகள்

JUST IN: 8 கட்சிகளுக்கு அபராதம் விதிப்பு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை பொதுவெளியில் வெளியிடாததற்கு பாஜக உள்பட 8 கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலின்போது, விதிகளை மீறிதயாகக் கூறி, காங்கிரஸ், பாஜக உள்பட ஏழு கட்சிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிபிஎம், தேசியவாக காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில், வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை தங்கள் கட்சியின் இணையதங்களில் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வாக்காளர்கள் இதுகுறித்த தகவல்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் செயலியை உருவாக்கி, குற்ற வழக்குகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கேட்டு கொண்டுள்ளது.

Categories

Tech |