அகில இந்திய ஒதுக்கீடு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய நிலையில்,தமிழக அரசின் இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி,கடந்த ஆண்டு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய பிறகு தமிழக இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? OBC பிரிவினருக்கு மாநில அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என கோருவது ஏன்? என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. இடம் நிரப்பப்படாமல் மீண்டும் மாநில அரசுக்கு திரும்ப வழங்கினால் மட்டுமே இட ஒதுக்கீட்டை பின்பற்ற முடியும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.