Categories
உலக செய்திகள்

வேகமாய் பரவும் காட்டுத்தீ…. தப்பியோட முயன்ற இளம்பெண்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

பிரிட்டிஷ்  கொலம்பியாவில் Monte Lake என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் Jackie Cookie என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் உட்பட  சில வீட்டு விலங்குகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் Jackie அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் காட்டுத்தீயானது மிக வேகமாக பரவி வருவதை கண்டுள்ளார். இதனையடுத்து Jackie தனது வீட்டில் உள்ள சில முக்கியமான பொருட்களை எடுத்து கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். ஆனால் தீ வேகமாக பரவியதால் Jackieயை உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் Jackie  தனது வீட்டில் இருந்த ஒரு வேனில் ஏறி தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார்.

அப்பொழுது வெப்பத்தில் வேனின் டயர்கள் உருகி போனதாக அவரது சகோதரர் Kevin Cookie கூறியுள்ளார். மேலும் Jackie தனது வீட்டிற்கு காப்பீடு செய்யாததால் நிதி திரட்டும் முயற்சியில்  அவரது சகோதரரான Kevin Cookie ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 160க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள், 138 கட்டிட பாதுகாப்பு அதிகாரிகள், 16 ஹெலிகாப்டர்கள் மற்றும் 53 கனரக உதவி வாகனங்கள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொலம்பியாவில் 6600 கட்டிடங்களில் வாழும் மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 32000 ஆயிரம் வீடுகளில் வசிக்கும் மக்களை வெளியேற தயாராக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |