Categories
தேசிய செய்திகள்

SPECIAL NEWS: மிஸ்டுகால் கொடுத்தால்…. உடனே fire…!!!

புதிய சமையல் எரிவாயு வாங்குவதற்கான சிறப்பு வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

உங்களுக்கு புதிய சிலிண்டர் வேண்டுமென்றால், நீங்கள் அலைய வேண்டியது இல்லை. ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். சிலிண்டர் உங்கள் வீடு தேடி வரும்.  அப்படிப்பட்ட ஒரு வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 8454955555 என்ற நம்பருக்கு நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தால் போதும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ் எம் வைத்தியா இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியன் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பரில் இருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்து, சிலிண்டர் ரீபிள் செய்து கொள்ள முடியும். இந்த வசதி சில பகுதிகளில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நீங்கள் சிலிண்டர் புக்கிங் செய்த பிறகு பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS), IndianOil One App அல்லது https://cx.indianoil.in வலைதளம் மூலமாகப் பணம் செலுத்திக் கொள்ளலாம். மேலும் வீட்டிலிருந்தே இரட்டை இணைப்பைப் பெறும் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |