Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு ”பெண்களுக்கு தாய் வீடு உதவி” பண வரவு கூடும் ….!!

மேஷம் ராசி அன்பர்களே…!!  இன்று புதிய கலை பயிற்சிகளில் தேர்ச்சி ஏற்படும்.  சாதுரியமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் அல்லது வியாபாரம் மூலம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சவால்களை திறமையுடன் எதிர்கொள்வீர்கள். பலரும் வியந்து பார்க்கின்ற நல்ல நிலை இன்றைக்கு ஏற்படும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். இன்று  பண வரவு கூடுதலாகவே கிடைக்கும் , சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும்.

தொழில் வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகவே பணிகளை செய்யும் படி இருக்கும். இன்று அனைவரின் ஆதரவையும் பெற்று முன்னேற்றமான சூழ்நிலையை  சந்திக்கக்கூடும் . இன்று நீங்கள் காலையில் எழுந்தவுடன் மகாலட்சுமி வழிபாட்டையும் மேற்கொண்டால் அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். நீங்கள் நினைத்ததும் நடக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்டமான  எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |