காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய விவசாயியை கைது செய்து 1,100 லிட்டர் சாராய ஊறலையும் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள கார்கூடல்பட்டி பகுதியில் உள்ள செம்மண் காடு கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி பாலமுருகனின் உத்தரவின்படி ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செட்டியண்ணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செம்மண் காடு பகுதியில் வசிக்கும் விவசாயியான செல்வராஜ் என்பவர் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சியது தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து செல்வராஜை கைது செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த 1,100 லிட்டர் சாராய ஊறலையும்கீழே கொட்டி அழித்துள்ளனர்.