ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று வியாபார விரிவாக்கங்கள் வெற்றி பெற்று எதிர்பார்த்த பணம் வரவு வந்து சேரும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயத்தைப் பற்றி மட்டும் பேச வேண்டாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு அக்கறையுடன் இன்று பணிபுரிவது அவசியம். குடும்ப செலவு கொஞ்சம் கூடும். ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து உண்ண வேண்டாம். இன்று ஓரளவு சிறப்பான முன்னேற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கக் கூடும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர்வான எண்ணங்கள் இன்று இருக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். நட்பு உங்களை பாராட்டும் வகையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இருந்தாலும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் , ஒவ்வாத உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கொடுக்கல் , வாங்கல் விஷயங்கள் இன்று ஏதும் வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். இன்றைய நாள் உங்களுக்கு நல்லபடி முன்னேற்றத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விஷ்ணு பகவானை மனதார நினைத்து , விஷ்ணு பகவானுக்கு நீங்கள் அர்ச்சனை செய்து , இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும். அதே போல நீங்கள் வெளியில் செல்லும்போது ஆரஞ்ச் நிற துண்டுகளை பயன்படுத்துவது நல்லது.. ஆரஞ்சு நிற கலரில் துண்டுகளை பாக்கெட்டில் வைத்து செல்லலாம். அப்படி செல்லும் போது உங்களுக்கு அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்