தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. மேலும் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தனியார் பள்ளிகளில் அதிக அளவில் கூட்டம் சேர்வதை தடுக்க வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சிஇஓ- க்கள் அனைவரும் தனியார் பள்ளிகளுக்கு surprise visit செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.