ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி சென்னை வந்துள்ளார்.
கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றது. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மூலம் இந்த தொடர் தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டியில் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கு முதல் அணியாக சிஎஸ்கே அமீரகம் செல்லவுள்ளது. இதற்காக சிஎஸ்கே அணி கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள் சென்னை வந்துள்ளனர். தற்போது குடும்பத்துடன் சென்னை வந்துள்ள தோனியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டிகளை எதிர்நோக்கி கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.