தமிழகத்தில் 2026-க்கு முன்னதாகவே சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பதவியில் இருக்கும் பொழுது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான வகையில் பணம் சேர்த்ததாக கூறி அவர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதலே எஸ் பி வேலுமணிக்கு சொந்தமாக உள்ள பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிமுக தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது திமுகவில் சமீபத்தில் இணைந்த பலர், கடந்த காலங்களில் அதிமுகவிலிருந்து பணம் சம்பாதித்தவர்கள். இது அனைவருக்கும் தெரியும். வரும் 2026-க்குள் திமுக அரசு கலைந்து சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று அவர் தெரிவித்தார்.