இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானங்கள் கனடா செல்வதற்கான தடையை செப்டம்பர் 21-ஆம் தேதி நீட்டித்துள்ளது. டெல்டா வகை வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரு மாதத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா பரவல் குறையாத காரணத்தினால், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், இந்தியாவில் மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி வரை இந்த தடையை நீட்டித்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்தியாவில் இருந்து யாரும் தங்கள் நாட்டிற்கு வரக்கூடாது என்று ஏற்கனவே சில நாடுகள் அறிவித்திருந்தது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தன. இந்த தடைதான் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.