Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்றுவலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா சிங்காரபுரம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்துள்ளார். இவள் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் பல மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் பாண்டியனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மனமுடைந்த பாண்டியன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட சிகிச்சை பலனின்றி பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து பாண்டியனின் மகள் பிரியங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |