இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்தை அச்சிடக்கோரி தொடரப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட, இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கினார். விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்று நம்ப பட்டாலும், அவரது உடல் ஒருபோதும் மீட்கப்படவில்லை. அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும், அவரின் தியாகம் பற்றி தற்போதைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இதனால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படத்தை ரூபாய் நோட்டுகளில் இடம்பெற செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேசர், எஸ் ஆனந்தி ஆகியோர் நேதாஜியின் தியாகம் ஒருபோதும் மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது. இந்த தேசத்தின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். எனவே மனுதாரர் கோரிக்கையை ஏற்று மத்திய நிதி அமைச்சகம் மற்றும் வங்கி தரப்பில் பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரூபாய் நோட்டுகளில் வேறு தலைவர்களின் படங்களை பதிவு செய்வது பற்றி பரிசீலனை செய்தோம். ஆனால் மகாத்மா காந்தி படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பதிவு செய்ய இயலாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் ரூபாய் நோட்டுகளில் வேறு இந்திய தலைவர்களின் படங்களை பதிவு செய்தால், ஜாதி, மத சாயம் பூசப்படும் என்று கருத்து தெரிவித்த நிலையில் மனுவை உச்ச நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.