நாளை முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை தாம்பரம் ரயில்வேயில் மாற்றம் ஏற்படும் என்று தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை அனைத்தும் புதன் கிழமைகளிலும், காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில், மதுரை-சென்னை எழும்பூர் இடையிலான அதிவிரைவு சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது.