Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் இருப்பது நிச்சயதார்த்த மோதிரமா?… மனம் திறந்த நயன்தாரா… வைரலாகும் வீடியோ…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகிறது. மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்ட புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தொகுப்பாளினி டிடி நயன்தாராவை பேட்டி எடுக்கிறார்.

அப்போது நயன்தாரா கையில் அணிந்துள்ள மோதிரம் குறித்து டிடி கேட்டபோது ‘இது நிச்சயதார்த்த மோதிரம்’ என நயன்தாரா கூறுகிறார். மேலும் விக்னேஷ் சிவனிடம் தனக்கு பிடித்தது, பிடிக்காதது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா  பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சுவாரசியமான புரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |