மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கோபாலகிருஷ்ணன் மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் மாரடைப்பு காரணமாக கோபாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.