Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வாலிபர்…. உரிமையாளர் அளித்த புகார்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

போலி நகையை அடகு வைக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கத்தில் அடகு கடை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கடைக்கு சென்ற ஒரு வாலிபர் 6 பவுன் நகையை அடகு வைக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அந்த நகையை வாங்கி பரிசோதனை செய்து பார்த்த போது அது போலியானது என்பது உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அடகு கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும் சுரேந்தர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நண்பர் ஒருவர் போலி நகையை கொடுத்து அடகு வைத்து தருமாறு தெரிவித்துள்ளதாக சுரேந்தர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். மேலும் அவரது நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |