Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… “கஷ்டங்கள் தீரும்”.. சொத்து பிரச்சனை தீரும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். கஷ்டங்கள் தீரும் நாளாக இருக்கும். காரியத் தடைகள் விலகி செல்லும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வேதனைகளை சாதனைகளாக்கி இன்று நீங்கள் மாற்றுவீர்கள். சிலரது தேவையற்ற விமர்சனம் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும். வாழ்வில் லட்சியங்களை உணர்ந்து பணிபுரிவது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேறுவதற்கு கூடுதலாக மூலதனம் தேவைப்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு இருக்கட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படலாம். ஆனால் அன்பு கூடும். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு காணப்படும். இன்று நீங்கள் முக்கியமான வேலைகளுக்கு செல்லும் போது கருநீலநிற கைக்குட்டையை  எடுத்துச் சென்றால்  அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். இதனை நீங்கள் தயவு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல நீங்கள் காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை மனதார நினைத்தால் அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி செல்வ நிலை உயரும்.

இன்று உங்களுக்கு  அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்டமான  எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |