Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’… சூப்பரான ஷூட்டிங் அப்டேட்…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .

Kamal Haasan and Vijay Sethupathi start shooting for Vikram | Tamil Movie  News - Times of India

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் விக்ரம் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை காரைக்குடியில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |