வாலிபரை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அக்ரஹார பகுதியில் ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் ஜான் கடந்த பிப்ரவரி மாதம் சில நபர்களால் கொலை செய்யப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 4 பேரை கைது செய்த காவல்துறையினர் மேலும் இருவரை தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டில் மறைந்திருந்த ருக்மணி அம்மாள் மடத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நாகராஜனை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.