பிரகாஷ் ராஜ் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குனர் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கோவளத்தில் உள்ள வீட்டில் சறுக்கி விழுந்த நிலையில் அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முறைப்படி சிகிச்சை மேற்கொள்ள பிரகாஷ்ராஜ் ஹைதராபாத் சென்றுள்ளார் .இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சிறிய விபத்து, லேசான எலும்பு முறிவு தான். பாதுகாப்பு கருதி ஹைதராபாத்தில் உள்ள நண்பர் டாக்டர் குருவாரெட்டியிடம் செல்கிறேன். இது எல்லாம் சரியாகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.