திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி ஆகும்.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 5 பவுன் நகைகளுக்கு குறைவாக அடகு வைத்துள்ள நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக வதந்தி பரவி உள்ளது. இதை நம்பிய ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை வங்கி ஊழியர்களிடம் நகை கடன் தள்ளுபடி தொடர்பாக யாரோ வதந்தி பரப்புவதாக கூறியதை அடுத்து விவசாயிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.