தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள முத்து கடையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும் எனவும், கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்க வேண்டும் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் கூட்டமைப்பினர், சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.