Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தகராறு….. தாக்கிக்கொண்ட நண்பர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குடி போதையில் வாலிபர் தனது நண்பரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மனச்சநல்லூர் பகுதியில் தீபன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் இரவு நேரத்தில் மது குடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சதீஷ்குமார் தான் வைத்திருந்த கத்தியால் தீபன் ராஜின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை அடுத்து தீபன் ராஜின் நண்பர்கள் சதீஷ்குமாரை தாக்கியுள்ளனர். அதன் பின் அருகில் இருந்தவர்கள் சதீஷ்குமார் மற்றும் தீபன் ராஜ் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |