Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோபத்தில் வெளியே சென்ற கணவன்… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்குள் நடந்த சண்டையால் ஆத்திரமடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தேவேந்திரகுலம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு சுதாஎன்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர்களுக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில் முருகேசன் ஆத்திரமடைந்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

இதனைதொடர்ந்து அவர் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த சுதா அங்கு சென்று கணவரின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சுதா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |