திருச்சி அணிக்கு எதிரான தகுதிச்சுற்று-1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 153 ரன்களை குவித்துள்ளது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது . இதில் இன்று நடந்து வரும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களான கவுசிக் காந்தி ,ஜெகதீசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதன்பிறகு களமிறங்கிய ராதாகிருஷ்ணன் அதிரடி ஆட்டத்தை காட்டினார்.
இவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 82 ரன்களை குவித்தார். இவருடன் இணைந்து ஆடிய சசிதேவ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் களமிறங்கிய ராஜகோபால் சதீஷ் 29 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் .இறுதியாக சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்துள்ளது .திருச்சி அணி சார்பில் சரவணன் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து களமிறங்கியுள்ள திருச்சி அணி 154 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.