Categories
சினிமா தமிழ் சினிமா

பையா படத்தின் இயக்குனரிடம்….. டோஸ் வாங்கிய தெலுங்கு நடிகை…. டோலிவுட்டில் பரபரப்பு….!!

நடிகை கீர்த்தி ஷெட்டியை இயக்குனர் லிங்குசாமி திட்டிய செய்தியானது டோலிவுட் நடிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

விஜய் சேதுபதி நடித்த தெலுங்கு திரைப்படமான உப்பெண்ணா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில்  நடிகை கீர்த்தி ஷெட்டி அறிமுகமானவர். இதனை அடுத்து    இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்த நிலையில் இப்படத்தின் உணர்ச்சிபூர்வமான காட்சி ஒன்றை படமாக்கும் பொழுது கீர்த்தி ஷெட்டி ஒழுங்காக நடிக்கவில்லையாம்.

மேலும் பல டேக்குகள் எடுத்தும் அவரின் நடிப்பு நிறைவு அளிக்காத காரணத்தினால் இயக்குனர் லிங்குசாமி அனைவரின் முன்பும் கீர்த்தியை உரத்த குரலில் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்தி ஷெட்டி அவரின் கேரவனுக்கு அழுதுகொண்டே சென்றுள்ளார். இந்த செய்தியானது டோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Categories

Tech |