விருச்சிகம் ராசி அன்பர்களே.! பொருட்களை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனைகளை சொல்லக்கூடும். தேவையில்லாத விஷயங்களை எல்லாம் இழுத்து விடுவார்கள். பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை யோசித்து முடிவெடுக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப் படுவார்கள். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கக்கூடும். கடுமையான உழைப்பு இருக்கும். அதற்கு நல்ல பலனும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு காரியத்தில் இறங்கும் போது அது சரி வருமா வராதா என்று யோசித்து முடிவெடுக்க வேண்டும். மனக்குழப்பம் அதிகரிக்கும். பொருட்களை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சில்லறை சண்டைகளை தவிர்த்துவிட வேண்டும். காதல் கொஞ்சம் கசக்கும். தேவையில்லாத குழப்பங்கள் உருவாகும். காதலில் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். மாணவர்கள் கல்வி பற்றிய அக்கறை இருக்கும். கல்வியில் சிந்தனை அதிகமாக இருக்கும். மேற்கல்விகான முயற்சியில் வெற்றி வாய்ப்புகளும் அரசாங்க தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பின்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 4 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க்